சினிமா செய்திகள்
யு சான்றிதழ் பெற்ற வைபவ்வின் சிக்சர்!

வைபவ் நடித்துள்ள சிக்சர் படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
அறிமுக இயக்குனர் காசி இயக்கியுள்ள படம் தான் சிக்சர், இந்த படத்தை வால்மேட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது.
மாலை கண் நோயால் அவதிப்படும் ஒருவரின் வாழ்க்கையை மிகவும் சுவாரசியத்துடனும் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 30ல் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வைபவுடன் இணைந்து பாலக் லால்வானி, ராதாரவி, சதிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

















