சினிமா செய்திகள்
வைபவ் வாய்ஸ்க்கு என்னாச்சு?
Published
4 years agoon
By
seithichurul
மேயாத மான், சிக்ஸர் என தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் வைபவ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள டாணா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில், வைபவ், நந்திதா, யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டாணா என பெயரிட்டுள்ளனர்.
அண்மையில் வைபவ் நடிப்பில் வெளியான சிக்ஸர் டீசரில் அவருக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது என சின்னதம்பி படத்தில் வரும் கவுண்டமணியின் போர்ஷனை வைத்து படமாக்கி இருந்தனர்.
இப்போது வெளியிட்டுள்ள டாணா படத்தில், அவருக்கு சோகமோ, கோவமோ வந்தால் திடீரென குரல் பெண் குரலாக மாறிவிடும் என புதிய காமெடி கதைக் களத்துடன் யுவராஜ் இறங்கி சிக்ஸர் அடிக்க உள்ளார்.
போலீஸ் அதிகாரிக்கு பெண் குரல் என்றால் எப்படி இருக்கும் என எண்ணி பார்த்தாலே சிரிப்பாக வரும், பழைய கவுண்டமணி காமெடியில் புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டி காமெடியில், கம்பீரமான போலீஸின் குரல் பெண் குரல் போல சித்தரிக்கப்பட்டு இருக்கும், அந்த இன்ஸ்பிரேஷனில் இந்த படம் உருவாகியுள்ளதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You may like
-
என்ன கருமம் டா இது.. சன்னி லியோன் படத்தோட ப்ரமோவை பார்த்தாலே யாரும் தியேட்டருக்கு வரமாட்டாங்க போல!
-
இன்னும் 12 மணி நேரம் தான் உயிருடன் இருப்பேன்: நயன்தாரா
-
’பிசாசு 2’ படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மிஸ்கின்!
-
என்னை வச்சு நிறைய பேர் சம்பாதிக்குறாங்க, நல்லா இருக்கட்டும்: வாணிபோஜன்
-
சிங்கம்-நரி கதை சொல்லும் விஷ்ணு விஷால்: ‘மோகன்தாஸ்’ டீசர்
-
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!