சினிமா செய்திகள்
கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ்!

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள கென்னடி கிளப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் கென்னடி கிளப் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்த படக்குழுவுக்கு இந்த செய்தி புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமா இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். அந்த படம் தமிழக ரசிகர்களிடையே பெரிதும் கவர்ந்தது. அந்த படத்தில் நாயகனாக நடித்திருந்த விஷ்ணு விஷால், மற்றும் அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பரோட்டா காமெடி மூலம் சூரி என பல நட்சத்திரங்களுக்கு எதிர்காலமாக அந்த படம் அமைந்தது.
பெண்கள் விளையாட்டை மையமாக வைத்து இயக்குநர்கள் தற்போது படம் எடுக்கும் சீசன் ஆரம்பித்துள்ளது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படம் பெண்கள் ஃபுட்பால் குறித்த படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில், பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து கென்னடி கிளப் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.




















