சினிமா செய்திகள்
இனிமே பேய் படம் இல்லை; சூப்பர் ஹீரோவாகும் ராகவா லாரன்ஸ்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் காஞ்சனா 1,2&3 என மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை ராகவா லாரன்ஸ் கொடுத்துள்ளார். மூன்றாம் பாகத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையிலும், 150 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிப்படமாக மாறிவிட்டது. இந்நிலையில், அடுத்த லெவலுக்கு லாரன்ஸ் ரெடியாகி உள்ளார்.
பேய் படங்களை எடுத்து ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ், அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளராம். இதுகுறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும், படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 3டி தொழில்நுட்பத்தில் அதிக பொருட்செலவில் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் எடுக்க உள்ளதாகவும், இந்த படத்தை ராகவா லாரன்ஸே இயக்குவார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

















