சினிமா
நயன்தாரா- ராகவா லாரன்ஸ் இணையும் புதிய படம்?

நடிகை நயன்தாரா, நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் புதிய படத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ், தற்போது ‘சந்திரமுகி 2’ படப் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இதுதவிர, ‘ஜிகிர்தண்டா2’, ‘அதிகாரம்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. மேலும், ப்ரியா பவானி ஷங்கருடன் இவர் நடித்திருக்கும் ‘ருத்ரன்’ திரைப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படங்களை அடுத்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை ‘மேயாத மான்’ படப்புகழ் ரத்தினகுமார் எழுதி இயக்குகிறார். ஹாரர்-காமெடி தளத்தில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொலப்படுகிறது.
இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். நடிகை நயன்தாரா தற்போது மும்பையில் ‘ஜவான்’ படப்பணிகளில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















