இந்தியா
பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 25.11.2026

- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. ஆனால் தீபம் ஏற்றுவம் நபர் மற்றும் மலைக்கு செல்வோருக்கான பெயர் பட்டியலை தேவஸ்தானம் தான் வழங்கவில்லை என்று மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா சார்பில் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- மதுரை ஆட்சியர் உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு சர்வேத்தூணில் தீபம் ஏற்ற வரவில்லை என்றும் மாலை ஆறுமணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். வேறு வழியில்லாமல் நாங்கள் வழக்கமாக ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தின்மேல் ஏற்றினோம் என்றும் அறிக்கை வெளியிட்டு பதில் சொல்லியுள்ளார்.
- கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார். நீதிமன்றத்தில் பொய் சொன்னது, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது என இந்தக் குற்றத்தை மறைக்க முயற்சித்ததில் முதன்மையானவர் தலைமைச் செயலாளர் சாய்குமார்.
- டிச.1 முதல் ஆன்லைன் வருகைப்பதிவு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 8 மணிநேர வேலை
- இந்தியர்களுக்கான விசா இல்லாத அனுமதியை ரத்து செய்கிறது மலேசிய அரசு.2027 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்.
- ரஷ்யா தனது பலம் வாய்ந்த ஸ்புட்னிக்-எஸ் என்ற அணு ஆயுத செயற்கைக்கோள் டிசம்பர் 2026ல் விண்ணில் புவியின் தாழ்வட்டப் பாதையில் செலுத்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்.
- சென்னையில் 18K, 22K, 24K ஆபரண தங்கத்தின் விலை, அதிரடியாக சரிவைக்கண்டு வந்த நிலையில், இன்றைய தினம், சவரனுக்கு சுமார் ரூ.2,600 வரை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் சற்று கலக்கம் அடைந்திருக்கிறார்கள்.
- வெற்றிகரமான விண்ணேற்றம்: நவம்பர் 25, 2026 அன்று சீனாவின் ஜியுகுவான் (Jiuquan) விண்வெளி ஏவுதளத்திலிருந்து Long March-2F ராக்கெட் மூலம் Shenzhou-24 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. முகமது ஜீஷான் அலி: 40 வயதான முன்னாள் பாகிஸ்தான் விமானப்படை விமானி Muhammad Zeeshan Ali, விண்வெளிக்குச் சென்ற முதல் பாகிஸ்தானியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
