இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.11.2026

- திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் வரும் கார்த்திகை நவம்பர் 24 அன்று மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல்.
- ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் **காஸெம் கரீபாபாதி அமெரிக்கா விதிக்கும் முற்றுகையை போர்ச் செயலாகவே கருதுவோம். அதற்கு பதிலளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அமெரிக்கா ஏற்கனவே **இருமுறை ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு கடும் தோல்வியை சந்தித்துள்ளது** என்றும் அவர் கூறினார். வாஷிங்டன் மீண்டும் ராணுவத் தீர்வை தேர்வு செய்தால், அதைவிட மிகப்பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும்.”**
- நம் உடலுக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் பயணம் செய்து, நோய் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் மருந்தைச் செலுத்தக்கூடிய மிகச்சிறிய ரோபோ போன்ற மருந்து காப்ஸ்யூல்களை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் எதிர்கால மருத்துவ சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்! மிகச்சிறிய காப்ஸ்யூல்கள்: மருந்தை உள்ளே வைத்துக்கொண்டு பயணிக்கும் வகையில் சிறிய ஜெல் உறையால் உருவாக்கப்படுகின்றன. காந்தத்தின் கட்டுப்பாடு: வெளிப்புறத்திலிருந்து செலுத்தப்படும் காந்தப்புலத்தின் உதவியால் இந்தக் காப்ஸ்யூல்களின் நகர்வையும் பயணிக்கும் திசையையும் கட்டுப்படுத்த முடியும்.
- நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத்தின் சூரத் நகருக்கும் வாபி நகருக்கும் இடையே இயக்க முடிவு.
- பஹ்ரைனில் உள்ள அல்-ரிஃபா (Al-Riffa) மற்றும் அவாலி (Awali) ஆகிய தளங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன ‘பேட்ரியாட்’ (Patriot) வான் பாதுகாப்பு ரேடார் அமைப்புகளை, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்துவிட்டதாக ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடியாக அறிவித்துள்ளது.
- தவெக MLA வி.எஸ்.பாபுவின் மறைவை தொடர்ந்து, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு அதன்படி தமிழ்நாட்டில் காலியான சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு; திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, அம்பாசமுத்திரம், கரூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன
- கருப்பை வாய் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு 14 வயதுக்குட்பட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசி




