இந்தியா
இரவு நேரச் செய்திகள் – 20.11.2026

- அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள உட்கியாக்விக் (Utqiagvik) நகரம், 2026-ஆம் ஆண்டிற்கான தனது கடைசி சூரிய அஸ்தமனத்தைக் கண்டுள்ளது. இனி 2027 ஜனவரி 22-ஆம் தேதி வரை சூரியன் மீண்டும் அடிவானத்திற்கு மேலே உதிக்காது. அமெரிக்காவின் மிக வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக துருவ இருளை (Polar Night) அனுபவிக்கப் போகிறது.
- கென்யாவில் தீவிரமடையும் பால் தட்டுப்பாடு : இந்தியாவிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்ய அரசு பரிசீலனை
- உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கைக் கோரி குடியரசுத் துணைத்தலைவரை சந்தித்து சென்னை பார் அசோசியேஷன் கோரிக்கை.
- மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி புதிய பிஎஸ்-6 வாகனங்களுக்கான பியுசி சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் 3 ஆண்டுகளாக நீட்டிப்பு. அதே சமயம் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் புதுப்பிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தல். – சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்.
- பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டது ஏன்? என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி அரசின் கொள்கை முடிவு என அரசு தலைமை வழக்கறிஞர் பதிலளிக்க, விமானப் போக்குவரத்து ஆணையம், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் விரிவாக பதிலளிக்க உத்தரவு.
- சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களுக்கான விமான சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் நவம்பர் 30 வரை ரத்து செய்துள்ளன. பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





