Uncategorized
பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறை

பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு ரேஷன் விநியோக திட்டத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்த்திலிருந்தே நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்த்து இருக்க வேண்டியதாகி விட்டது. அதன்படி பொருள்கள் வழங்கப்படுவதற்கு பதிலாக அதற்கு ஈடான பணம் உரிய வங்கி கணக்கில் வரவ வைக்கப்படும். அதைக்கொண்டு பொதுமக்களே தங்களுக்கு வேண்டிய பொருள்களை வேண்டிய கடைகளில் வாங்கி கொள்ளலாம் என அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
இப்போது இந்த பணமாக வழங்கும் திட்டத்தில் சில இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதால் அவற்றைத் தடுக்க புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் QR கோடு வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு ரேஷன் விநியோகத்தில் உள்ள முறைகேடுகளைத் தடுக்க எஸ்பிஐ வங்கி உதவியுடன் ஆதார் இணைக்கப்பட்ட ‘ஈ-ருப்பி’ டிஜிட்டல் வவுச்சர் முறையைக் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்குப் பணமாக வழங்கப்படாமல், அந்தந்த மாதத்திற்கான அரிசி, கோதுமை போன்ற பொருட்களின் அளவு கொண்ட QR கோடு வவுச்சர் அனுப்பப்படும். ரேஷன் கடைகளில் இந்த QR கோடை ஸ்கேன் செய்து, OTP மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்குப் பிறகு பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஈ-வவுச்சர் எப்படி வேலை செய்யும்? ரொம்ப சிம்பிள் ஸ்டெப்ஸ்!
‘ஐயோ, இதெல்லாம் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்குமே’னு நீங்க நினைக்கத் தேவையில்லை. ரொம்ப சிம்பிள்ங்க! உங்க வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு எவ்வளவு ரேஷன் பொருட்கள் (உதாரணத்துக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை) ஒதுக்கப்பட்டு இருக்கோ, அதுக்குத் தகுந்த மாதிரி எஸ்பிஐ (SBI) வங்கி மூலமா டிஜிட்டல் ஈ-ருப்பி வவுச்சர் ஒன்னு ஜெனரேட் ஆகும். அது உங்க ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் அல்லது கியூஆர் (QR) கோடா வந்துரும். அப்படி இல்லன்னா ‘மேரா ரேஷன்’ (Mera Ration) ஆப் மூலமாவும் நீங்க ஈஸியா செக் பண்ணிக்கலாம்.
நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்குவது எப்படி?
வவுச்சர் வந்தாச்சு, அடுத்து கடைக்குப் போனா என்ன பண்ணனும்? நேரா உங்க ஊருல இருக்கிற நியாயவிலைக் கடைக்கு (Fair Price Shop) போயி டீலர் கிட்ட அந்த கியூஆர் கோடைக் காட்டணும். அவங்க அதை ஸ்கேன் பண்ணதும், உங்களுக்கு என்னென்ன பொருட்கள் வரணும்னு ஸ்கிரீன்ல காட்டும். உடனே உங்க மொபைலுக்கு ஒரு ஓடிபி (OTP) வரும். அதைச் சொன்னதும் அடுத்த கட்டமா உங்களோட பயோமெட்ரிக் (Biometric) கைரேகை சரிபார்ப்பு நடக்கும். இது எல்லாமே சக்சஸ் ஆனதும் உங்களுக்கான ரேஷன் பொருட்களை நீங்க தாராளமா வாங்கிக்கலாம்.
ஈ-வவுச்சர் பணமா? பொருளா? இதைப் புரிஞ்சுக்கோங்க!
‘ஈ-வவுச்சர்’னு சொன்ன உடனே, ‘ஓ… நமக்கு ₹500, ₹1000-னு பணமா அக்கவுண்டுக்கு வந்துரும் போல’னு நீங்க நினைச்சுடாதீங்க. இது பணமே கிடையாது! அந்த வவுச்சர்ல என்ன பொருள் (உதாரணத்துக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமை) மென்ஷன் பண்ணிருக்கோமோ, அந்தப் பொருள் மட்டும்தான் கிடைக்கும். இந்த வவுச்சரை வச்சு எந்தக் காரணத்தைக் கொண்டும் பணத்தைப் பெற முடியாது. கடையில பொருட்களாக மட்டும்தான் வாங்க முடியும்,
மாசம் மாசம் வவுச்சர் மாறுமா? காலாவதி ஆகுமா?
ரொம்ப முக்கியமான விஷயம் இதுதான்! ஒவ்வொரு மாதமும் உங்களுக்கான புதிய ஈ-வவுச்சர் ஜெனரேட் ஆகும். அதை வச்சு அந்த மாதத்துக்குரிய பொருட்களை நீங்க வாங்கிக்கலாம். ஒருவேளை நீங்க இந்த மாசம் ரேஷன் பொருட்கள் எதையுமே வாங்கல அப்படின்னா, இந்த மாசத்துக்கான வவுச்சர் தானா டீ-ஆக்டிவேட் (Deactivate) ஆயிடும். அடுத்து அடுத்த மாசத்துக்கான புது வவுச்சர் வந்துரும். போன மாசத்து வவுச்சரை அடுத்த மாசம் சேர்த்து வச்சு யூஸ் பண்ண முடியாது.
நேரடியா பணம் கொடுக்காமல் ஏன் இந்த ஈ-வவுச்சர் முறை?
‘அதுக்குப் பதிலா நேரா வங்கி கணக்குல பணத்தையே போட்டுக் கொடுத்திடலாமே’னு ஒரு கேள்வி வரலாம். ஆனா, 2025-ல சத்தீஸ்கர், புதுச்சேரி மாதிரி சில இடங்கள்ல இந்த மாதிரி நேரடி பணப் பரிமாற்றம் (Cash Transfer) ட்ரையல் பார்த்தாங்க. ஆனா அது செம லியூல முடிந்தத. பணத்தைக் கொடுத்தா அது மளிகை சாமானுக்குப் போறதை விட்டுட்டு, குடிப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ வீட்ல இருக்கவங்க செலவழிச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம பிரைவேட் மார்க்கெட் விலைக்கு ரேஷன் பணமும் போதவில்லை. அதனாலதான் பணத்தைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் பொருட்களாகவே தர முடிவு செஞ்சாங்க.
ஏற்கனவே எந்தெந்த மாநிலங்களில் இது நடைமுறையில் இருக்கு?
குஜராத் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள்ல இந்த ஈ-வவுச்சர் முறை இப்போதே வெற்றிகரமாக நடைமுறையில இருக்கு. அங்க இருக்க மக்கள் இந்த முறையிலதான் நியாயவிலைக் கடைகள்ல பொருட்களை வாங்கிட்டு வராங்க.
ரேஷன் கடைக்காரர் ஏன் போராட்டம் பண்றாங்க? அரசின் விளக்கம் என்ன?
புதிய சிஸ்டம் வருதுன்னு சொன்னதும், நாடு முழுவதும் இருக்கிற ரேஷன் கடை சங்கங்கள் ‘இதை கொண்டு வந்தா எங்க கடைங்கள மூட வேண்டியதுதான்’னு சொல்லி போராட்டம் பண்ண ஆரம்பிச்சாங்க. ஆனா, அரசாங்கம் தரப்புல தெளிவான விளக்கம் கொடுத்தாங்க. அதாவது, “நாங்கள் நியாயவிலைக் கடைகளை மூடச் சொல்லவில்லை; கடைகள் வழியாத்தான் பொருட்கள் வழங்கப்படும். அந்த விநியோக முறை மட்டும்தான் டிஜிட்டல் ஆகுது”னு உறுதியளிச்சாங்க. யாருக்குப் பொருள் போய்ச் சேரணுமோ அவங்களுக்குத் துளியும் ஊழல் இல்லாம போய் சேரணும்ங்கிறதுதான் இதன் ஒரே நோக்கம்.
இதன் காரணமாக ரேஷன் விற்பனையாளர்கள் தனியார் கடைகளுக்கு ரேஷன் பொருட்களை கள்ளச் சந்தையில் தள்ளி காசு பார்க்க முடியாது. பெருமளவு ஊழல் தடுக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் மத்திய அரசின் புதிய ‘ஈ-ருப்பி’ (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் திட்டம் தொடர்பான தற்போதைய அறிவிப்புகள் மற்றும் சோதனை முயற்சிகளின் அடிப்படையில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதமும், விதிமுறைகளும் மாறுபடலாம். எனவே, ரேஷன் பொருட்கள் மற்றும் புதிய வவுச்சர் முறை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு உங்கள் மாநிலத்தின் உணவுப் பொருள் வழங்கல் துறை (Civil Supplies Department) அல்லது அருகிலுள்ள நியாயவிலைக் கடையைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.


