இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.11.2026

- விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்! அக்டோபர் மாதத்திலும் தேசிய சராசரியை மிஞ்சிய தமிழகத்தின் சில்லறை பணவீக்கம் 7.29% ஆக உயர்வு! தொடர்ந்து அதிகரிக்கும் விலைவாசியால் பொதுமக்கள் பாதிப்பு!
- பாலியல் புகார்கள் தொடர்பாக ஜவஹ்ர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரும் காங்கிரஸ் எம்பி யுமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை பணிநீக்கம் செய்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உரிய விளக்கம் கேட்கும் நோட்டீஸ் மற்றும் நேரடி விசாரணை வாய்ப்பின்றி பணிநீக்கம் செய்தது ஏற்கமுடியாது. என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- தவெக ஆட்சி அமைத்த பிறகு உருவாக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படைக்கு 55 காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டனர். போலீசார் 780 பேரும் போதை பொருள் தடுப்பு அதிரடிப்படை பணிக்கு மாற்றம்.
- மாணவர்களுக்கான சைக்கிள் விலை ரூ.7235லிருந்து ரூ.5260ஆகவும், மாணவிகளுக்கான சைக்கிள் விலை ரூ.7476லிருந்து ரூ.5130 ஆகவும் குறைப்பு. இதன்படி மாணவர்களுக்கான சைக்கிளுக்கு ரூ.1975ம் மாணவிகளுக்கான சைக்கிளுக்கு ரூ.2346ம் குறைக்கப்பட்டது. – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
- 74 நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்! Outlook முதல் Copilot வரை பாதிப்பு நவம்பர் 12 வியாழக்கிழமை தொடங்கிய Microsoft சேவைத் தடங்கல், நவம்பர் 13 வெள்ளிக்கிழமை வரையிலும் தொடர்ந்தது. Outlook மின்னஞ்சல் சேவையுடன் Teams, Copilot, OneDrive உள்ளிட்ட Microsoft 365 சேவைகளிலும் பயனர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். Downdetector-ல் Outlook தொடர்பாக ஒருகட்டத்தில் 1.38 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் பதிவாகின. OpenAI மற்றும் Anthropic சேவைகளின் Microsoft 365 இணைப்புகளும் பாதிக்கப்பட்டன. நவம்பர் 13 காலை நிலவரப்படி, Microsoft சில சர்வர்களை மீண்டும் இயக்கி வந்தாலும், முழுமையான சீரமைப்பு உறுதிப்படுத்தப்படவில்லை.
- “தானப் பத்திரம் பதிவு செய்திருந்தாலும், தானம் பெறுபவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் செல்லாது!” – உச்சநீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்பு! பத்திரப்பதிவு மட்டும் போதாது! தானம் பெறுபவர் அதைச் சட்டப்படி ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்!” “தானம் வழங்கியவர் உயிருடன் இருக்கும்போதே தானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், அந்தத் தானம் முழுமை பெறாது!” “நிபந்தனையுடன் எழுதப்பட்ட தானப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், அதன் அடிப்படையில் சொத்துரிமை கோர முடியாது!”
- வங்க கடலில் நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ் பகுதிக்கு எதிரே மற்றொரு காற்று சுழற்சி உருவாகியுள்ளது இது மேலும் வரும் நாட்களில் தீவிரமடையும் தற்போது வரை வங்க கடலில் நீடிக்கும் காற்று சுழற்சி எங்கு கரை கடக்கும் என்பது உறுதியாகவில்லை.


