இந்தியா
இரவுச் செய்திகள் – 13.11.2026

- உலகின் செல்வாக்கு மிக்க இந்திய வம்சாவளித் தலைவர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்..!!
- பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகளாவிய போராட்டம்! வெள்ளி முதல் ஞாயிறு வரை பேரணிகள் நடத்த ஹமாஸ் அழைப்பு! காசாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வலியுறுத்தல்! நிவாரணப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும், காசா மக்களின் அவலநிலையை உலகின் கவனத்திற்குக் கொண்டுவரவும் அழைப்பு!
- நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் மோசமான ஆட்சி!” – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்! தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி நடைபெறாத நாளே இல்லை என்று திமுக அரசை விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான முயற்சியில் ஒன்றிய அரசு தீவிரம்.
- 2027-ம் ஆண்டில் 26 புதிய சாதனங்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது..!!
- இணைய உலகில் குவாண்டம் தொழில்நுட்பத்தின் புதிய முன்னேற்றம்! அமெரிக்காவின் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகம் மற்றும் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குவாண்டம் தகவல்களைச் சுமந்து செல்லும் ஒளித் துகள்களை திறந்தவெளி வழியாக 21 கிலோமீட்டர் தொலைவுக்குப் பரிமாறி சாதனை படைத்துள்ளனர்.
- பிரான்ஸில் 700-க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகள் மீது நடத்தப்பட்ட இணையத் தாக்குதலுக்கு ஈரானே காரணம் — பிரான்ஸ் அரசு குற்றச்சாட்டு
- நீலகிரி மாவட்டத்தில் ரயில் பாதைகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையடையாத காரணத்தால் மலை ரயில்களின் நெவைகள் நாளை நவம்பர் 14 முதல் 18 ம் தேதி வரை ரத்து.


