Uncategorized
வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்திய ரிசர்வ் வங்கி 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரக்கூடிய வகையில் புதிய காசோலைகள் தொடர்பான விதிமுறைகளை அறிவித்துள்ளது.
- அதன்படி பழைய காசோலைகளை இனி ரூ.50,000 க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
- ரூ.50,000 மற்றும் அதற்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு தனித்துவமான எண் மற்றும் எழுத்துக்களுடன் (ஆல்ஃபா நியுமெரிக்) குறியீடுகளுடன் கூடிய புதிய காசோலைகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.
- புதிய காசோலையில் சில பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி காசோலையில் வங்கி கணக்கு எண்ணுக்கு கீழே புற ஊதாக் கதிர் ஒளியில் மட்டுமே காணக்கூடிய வகையிலான சிறப்புக் குறியீடு இடம் பெற்றிருக்கும். மேலும் ரிசர்வ் வங்கி நடைமுறையுடன் நேரடியாக இணைக்கப்பட்ட வசதியும் இடம்பெற்றிருக்கும்.
- காசோலைகளில் பால்பாயிண்ட் பேனாக்கள் மூலம் மட்டுமே எழுத வேண்டும். ஜெல் பேனாக்கள் உள்ளிட்ட பிற பேனாக்களைப் பயன்படுத்தக் கூடாது.
- பெயர்கள், தேதிகள் அல்லது தொகையில் அடித்தல் அல்லது திருத்தல் இருக்கக் கூடாது. அவ்வாறு அடித்துத் திருத்தப்பட்டிருந்தால் காசோலை நிராகரிக்கப்படும்.
- அருகிலுள்ள உங்கள் வங்கிக் கிளைகளில் பழைய காசோலையை சமர்ப்பித்து புதிய காசோலையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விதிமுறைகள் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


