இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.03.2026

- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பிரமாணப் பத்திரத்தில் தங்களின் சமூக வலைதள கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். ஊடகச் சான்றளிப்பு மற்றம் கண்காணிப்புக் குழுவிடம் முன் சான்றிதழ் பெறாமல் சமூகவலைதளத்தில் அரசியல் விளம்பரங்களை வெளியிடக் கூடாது. – தேர்தல் ஆணையம்.
- பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.09 முதல் ரூ.2.35 வரை உயர்த்திய BPCL, HPCL, IOCL நிறுவனங்கள் ரூ.99.87-லிருந்து ரூ.101.89 ஆக விலை உயர்வு. சாதாரண பெட்ரோல் விலையில் மாற்றமில்லை.
- 2014ல் வெளியிட்ட Firephone தோல்வியடைந்ததை தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்தே வெளியேறிய “அமேசான்“ நிறுவனம் தற்போது ஏஐ தொழில்நுட்பத்துடன் Transformer எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிப்பு.
- வளைகுடா நாடுகள் அமெரிக்கப் படைகளுக்கு இடமளித்தால் அந்நாடுகளுக்கான கடலடி இணையக் கேபிள்கள் துண்டிக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
- உப்பு நீரையும் நன்னீரையும் கலந்து முடிவில்லாத மின்சாரம்! ஜப்பானின் புதிய வேதியியல் புரட்சி – உலகமே வியக்கும் மின் உற்பத்தி
- தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்தை எதிர்த்த மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்!
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என இரு மாநில அரசுகளின் தலைமை காஜிகளும் அறிவித்துள்ளனர்.
- ஈரான் போரில் ஈடுபட்டிருந்த விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கான அமெரிக்காவின் போரிக்கையை நிராகரித்தாக இலங்கை திபர் அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு.
- அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள 2026 ம் ஆண்டுக்கான வருடாந்தர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தானின் ஏவுகணைத் திறன் அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனவும் அமெரிக்காவுக்கு மிகப்பெரய அணு ஆயுத அச்சுறுத்தலாக பாகிஸ்தான் திகழ்வதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.














