Connect with us

இந்தியா

* பட்டா மாறுதல் செய்றீங்களா? வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் 15 நாளில் கிடைக்கும்

Published

on

அதிகாரிகளின் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட பட்டாக்கள் மட்டுமே இனி செல்லுபடியாகும்… *
* பட்டா மாறுதல் செய்றீங்களா? வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைனில் 15 நாளில் கிடைக்கும்
தமிழக வருவாய்த்துறையில் நிலம் தொடர்பான ஆவணங்களை பெறுவதில் இருந்த காலதாமதத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில், நம்முடைய அரசு தற்போது ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.. குறிப்பாக, பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்கள் இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அதிகாரிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. இதுவரை நடைமுறையில் இருந்த மேனுவல் எனப்படும் காகிதக் கோப்புகள் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, நூறு சதவீதம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.. அதை பற்றிதான் இங்கே சுருக்கமாக பார்க்க போகிறோம்…!!
பொதுவாக சொத்து வாங்க முயல்பவர்கள், குறிப்பாக ஒரு நிலத்தை வாங்கிய பிறகு அதன் பட்டாவை தன் பெயருக்கு மாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாகவே இதுவரை இருந்து வந்தது.. கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர் வரை பல கட்டங்களைத் தாண்ட வேண்டியிருந்ததால், பல மாதங்கள் இதற்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது..
ஆன்லைன் பட்டா மாறுதல்
ஆனால், இப்போது அப்படி கிடையாது.. நம்முடைய அரசு பொதுமக்களின் வசதிக்காக புதிய டிஜிட்டல் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதுதான் மேனுவல் எனப்படும் காகிதக் கோப்புகள் முறை ஆகும்..
நில உரிமையாளர்கள் தங்கள் வீட்டிலிருந்தே அல்லது அருகில் உள்ள பொதுச் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து, வெறும் 15 நாட்களுக்குள் பட்டா மாறுதல் ஆணையைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.. இந்த அதிரடி மாற்றமானது நிலம் வாங்குபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
மேனுவல் முறை கிடையாது…
இந்த நடைமுறையில், நீங்கள் நிலத்தை பதிவு செய்த உடனேயே அந்தத் தகவல் தானாகவே வருவாய்த்துறைக்கு சென்றுவிடும்.. எந்த நேரத்திலும் பட்டா (Anytime Patta) என்ற இணையதள வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதால், உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல்களை மிக எளிதாக ஆன்லைனிலேயே முடிக்க முடியும்..
அதேபோல், உட்பிரிவு செய்ய வேண்டிய நிலங்களுக்கும் ஆன்லைனிலேயே கட்டணம் செலுத்தி நில அளவையாளரை (Surveyor) வரவழைக்கும் வசதியும் எளிமையாக்கப்பட்டுள்ளது.. இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த ஒரு கோப்பையும் நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவை இனி கிடையாது..
வட்டாட்சியர் அலுவலகம் போக வேணாம்
மிக முக்கியமான விஷயம், ஊழலை தவிர்க்கும் நோக்கில் அதிகாரிகளின் டிஜிட்டல் கையொப்பம் இடப்பட்ட பட்டாக்கள் மட்டுமே இனி செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டால், அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை விண்ணப்பதாரர் தனது செல்போன் மூலமாகவே மெசேஜ் வழியாகவே தெரிந்து கொள்ளலாம்..
ஒருவேளை 15 நாட்களுக்கு மேல் ஒரு விண்ணப்பம் தேங்கிக் கிடந்தால், அது குறித்து மேலதிகாரிகள் நேரடியாகக் கேள்வி எழுப்பவும் இந்த புதிய சாப்ஃப்ட்வேர் வழிவகை செய்கிறது..
15 நாளில் பட்டா
இதில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பாமர மக்களும் நில ஆவணங்களை எளிதாக அணுக வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் மிக எளிமையான தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், நிலத்தின் உரிமையைச் சட்டப்படி உறுதி செய்வது இப்போது சாத்தியமாகியுள்ளது.. பொதுமக்கள் இந்த டிஜிட்டல் வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் நில ஆவணங்களைச் சரியாகப் பராமரித்துக் கொள்ளுமாறு தமிழக அரசின் வருவாய்த்துறை கேட்டுக் கொண்டுள்ளது..!!

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்2 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா7 நாட்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

இந்தியா6 நாட்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

இந்தியா6 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா5 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்5 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்5 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

வணிகம்5 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

Translate »
Registrati con il tuo indirizzo e mail. ?ு. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.