இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.01.2026

அணைவருக்கும் எங்களது இதயங்கனிந்த உழவர் திருநாள் வாழ்த்துக்கள்…
- தமிழ் கூறும் நல்லுலகெங்கிலும் பொங்கல் விழா கோலாகலம்… பொங்கல் பொருள்கள் விற்பனை படு ஜோர்…
- பொங்கல் வாழ்த்துக்களோடு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் தவெக தலைவர் விஜய்.
- மும்பை மாநகராட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை.. வர்த்தக தலைநகரை கைப்பற்றப்போவது யார்?
- தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணைப்புகுதியில் விவசாயிகள் முளைப்பாரி எடுத்து பென்னி குயிக்கின் பிறந்தநாளை கொண்டாடினர்.
- ஈரான் வான்பாதை மூடப்பட்டது. ஏர் இந்தியா விமானங்கள் செல்லாது.
- உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்புர் பாஸ்போர்ட்தான். 224 நாடுகளில் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
- புதிதாக அறிமுகமாகும் வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயிலில் முன்பதிவில் ஆர்ஏசி வசதி கிடையாது. குறைந்தபட்ச கட்டணமாக 3ம் வகுப்பு டிக்கெட்டுக்கு ரூ.960 வசூலிக்கப்படும். – ரயில்வே வாரியம் அறிவிப்பு.


















