இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 16.01.2026

- உண்மையான வயது குற்றப் பிண்ணணியை மறைத்து திருமணம் செய்வது வாழ்க்கைத் துணையை மனரீதியாக கொடுமைப்படுத்துவதற்குச் சமம். பொய்த் தகவல்களின் அடிப்படையில் அமைந்த திருமணத்தை செல்லாது என அறிவிக்க முடியும். – உயர்நீதிமன்றம்.
- இந்தியா முழுதும் உள்ள உணவகங்களில் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது சட்டவிரோதம் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
- புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக உருவாக்கி சர்ச்சையில் சிக்கிய க்ரோக் ஏஐயில் இனி அவற்றை உருவாக்க தடை விதித்தது எக்ஸ் நிறுவனம். ஆபாசமான படங்களை உருவாக்க முடியாதவாறு அல்காரிதத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- உலகிலேயே முதல் முறையாக நிலவில் அமெரிக்காவின் ப்ரூக் ஸ்பேஸ் நிறுவனம் ஓட்டல் அமைக்கும் பணிகளை 2029ல் தொடங்கி 2032ல் முடிக்க திட்டம்.
- எஸ்சி எஸ்டி இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையைக் கொண்டுவருவது தொடர்பான வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் 6 வாரம் கெடு.
- வெனிசுலாவைத் தொடர்ந்து மெக்சிகோ முதல் ஈரான் வரை அமெரிக்க படை குவிப்பு நடைபெற்று வருகிறது.
- இனி சாலை போடும் பணிகளின்போது பழைய சாலைகளை மில்லிங் செய்யாமல் புதிய சாலைகளை போட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். – முதலமைச்சர்.
- இந்த ஆண்டு இறுதிக்குள் டெல்லி மும்பை சென்னை உள்ளிட்ட 50 இடங்களில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
- வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தங்கும் விடுதிகளில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.60 குறைந்து கிராம் ரூ.13230ககும் சவரன் ரூ.105840க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.4 குறைந்து கிராம் ரூ.306க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.306000க்கும் விற்பனை ஆகிறது.


















