இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.05.2026

- சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் 17 வது சட்டமன்றத்தின் சபாநாயகராகவும் துறையுர் சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி தேர்வாகின்றனர். அவர்களை எதிர்த்து எவரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் முன்னால் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை அண்ணாநகரில் மதிமுக தலைவர் வை.கோ.வை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது துரை வைகோ உடனிருந்தார்.
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் நாதக தலைவர் சீமானை நேரில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.













