ஆரோக்கியம்
பீகாரில் 6 மாவட்டங்களில் தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு!!!!

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024 ம் ஆண்டு ஜீலை மாதம் வரையிலான கால கட்டத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்புர் சமஸ்திபர் பெகுசராய் சுகாரியா கதிகார் நாலந்தா ஆகிய மாவட்டங்களில் 17 முதல் 35 வயதிற்குட்பட்ட 40 பெண்மணிகளிடம் தாய்ப்பால் மாதிரிகள் பெறப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலிருந்துதான் இந்த அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்திருக்கிறது.
இவர்களின் தாய்ப்பாலில் யுரேனியம் வேதிப்பொருள் 5.25 மில்லிகிராம் அளவில் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாய்ப்பால் அருந்திய 70 சதவீதம் பச்சிளம் குழந்தைகளுக்கு ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு உடலில் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கான ஆபத்துக்கள் தோன்றியுள்ளன.
இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர் அசோக்சர்மா கூறுகையில் இது எப்படி ஏற்பட்டது என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் யுரேனியம் கலப்பு இருக்கிறதா என்பது குறித்து புவியியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். யுரேனியம் உணவில் கலப்பதன் மூலம் புற்றுநோய் நரம்புக்கோளாறு வளர்ச்சிக்குறைவு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
யுரேனியம் பெரும்பாலும் பாறைகளும் தண்ணீரும் உள்ள சுரங்கங்களில் காணப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர்கள் மற்றும் மகாவீர் புற்றுநோய் மைய மருத்துவ நிபுணர்கள் குழு உயிர் வேதியியல் துறை சார்பில் நடந்த ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.


