Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 63ல் மேலும் ஒரு நாயகி!

Published

on

தளபதி 63 படத்தின் அப்டேட்ஸ் தான் சமூக வலைதளங்களில் தினமும் ட்ரெண்டாகி வருகிறது. நேற்று பாலிவுட் வில்லன் நடிகர் டைகர் ஷெராஃப் தளபதி 63ல் இணைந்துள்ளதை அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின், அந்த அறிவிப்பை தொடர்ந்து, இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஜாக்கி ஷெராஃப் முதலிடத்தில் வந்தார்.

இந்நிலையில், தளபதி 63 படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால், ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி படத்தின் நாயகி ரெபா மோனிகா ஜான் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் தான் அது.

அட்லி இயக்கத்தில், பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கோச்சாக இந்த படத்தில் விஜய் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் நயன்தாரா, ’மேயாத மான்’ இந்துஜா என இரு நாயகிகள் இருக்கும் போது, மூன்றாவதாக ஜெய் பட நாயகியும் இணைந்துள்ளார்.

இதில், இந்துஜா மற்றும் ரெபா மோனிகா ஜான், பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகளாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Timers and stripe.