சினிமா
கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார் மற்றும் பிரியாமணி நடிப்பில் கடந்த மாதம் 12ம் தேதி வெளியான கஸ்டடி திரைப்படம் தியேட்டரில் காத்து வாங்கி படு தோல்வியை சந்தித்தது.
நாக சைதன்யா ரசிகர்களை சும்மா வச்சு செய்து கஸ்டடி படத்தை தியேட்டரில் பார்க்காமல் தப்பித்த உங்களையும் வீட்டிற்கே வந்து கஷ்டப்படுத்த படம் ரெடியாகி விட்டது.

#image_title
வரும் ஜூன் 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் கஸ்டடி படம் வெளியாக போவதாக செம கூலாக பார்ட்டி மோடில் இருக்கும் வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
சாகுந்தலம், பொன்னியின் செல்வன் 2 படங்களை தொடர்ந்து ஏமாந்து போன அமேசான் பிரைம் தலையில், கஸ்டடி படத்தையும் கட்டி விட்டனர்.
மாநாடு படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி படம் வெளியாகி உள்ள நிலையில், அதை பார்த்து விட்டு விஜய் ரசிகர்கள் தளபதி 68 படம் மாநாடு படம் போல மாஸாக வருமா? அல்லது கஸ்டடி படத்தை போல வந்து கவிழ்த்து விடுமா என பலத்த யோசனையில் சோஷியல் மீடியாவில் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.



















