சினிமா
தளபதி 68 படத்தை இயக்கப் போறது வெங்கட் பிரபு தான்.. அப்போ அட்லீ படம் என்ன ஆச்சு?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 67வது படமாக லியோ உருவாகி வருகிறது. லியோ படத்திற்கு பிறகு தளபதி 68 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லீ சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் போகிறார் என பயங்கரமாக உருட்டப்பட்டது. வாரிசு படம் வரை விஜய்யின் வசூலே 300 கோடி அளவு தான் என்பதையே உருட்டு என கிண்டல் செய்து வரும் நிலையில், 400 கோடி பட்ஜெட் எல்லாம் எப்படி சாத்தியம் என்கிற கேள்வி எழுந்த நிலையில், அந்த படமே தற்போது இல்லை என்பது உறுதியாகி விட்டது.

#image_title
அட்லீயை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் விஜய் 68வது படத்தில் நடிக்கப் போகிறார் என்றும் வாரிசு படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குநர் படமா? அதுவும் பாலய்யாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை கொடுத்த இயக்குநர் இயக்கத்தில் விஜய் நடிக்கிறாரா? என அவரது ரசிகர்களே ஷாக் ஆகி இருந்தனர்.
இந்நிலையில், அட்லீயும் கிடையாது, கோபிசந்த்தும் கிடையாது வெங்கட் பிரபு தான் தளபதி 68 படத்தை இயக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித்தின் மங்காத்தா முடித்த கையோடு விஜய்யை வைத்து வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்க இருந்த சூழ்நிலையில், பார்ட்டியில் விஜய் சரக்கடிக்கும் போட்டோ ஒன்றை வெங்கட் பிரபு அவரது அனுமதி இல்லாமல் ஷேர் செய்த நிலையில், தான் அந்த படத்தின் வாய்ப்பு பறிபோனது என்று பிஸ்மி உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் கூறிய நிலையில், அந்த பிரச்சனை எல்லாம் முடிவுக்கு வந்து தற்போது வெங்கட் பிரபுவுக்கு விஜய் ஓகே சொல்லி விட்டார் என்பது புரிகிறது.
ஆனால், கஸ்டடி படத்தை பார்த்து விட்டு விஜய் ஓகே சொன்னாரா? அல்லது கஸ்டடி படத்தின் பில்டப்பை வைத்தே வெங்கட் பிரபு விஜய் படத்தை ஓகே செய்துள்ளாரா? என்பது தான் பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
அஜித்துக்கு மங்காத்தா, சிம்புவுக்கு மாநாடு கொடுத்த வெங்கட் பிரபு விஜய்யை வைத்து க்ரிஞ்ச் படம் பண்ணாமல் மாஸ் படம் பண்ணினால் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்கின்றனர்.