Connect with us

சினிமா

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

Published

on

முத்தையா இயக்கத்தில் கார்த்தியை தவிர வேறு எந்த ஹீரோ நடித்தாலும் படம் பார்க்கக் கூட முடியாது போல, ஆர்யாவுக்கு கேப்டன் படத்தை தொடர்ந்து மற்றொரு படு சொதப்பலான படமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் அமைந்துள்ளது.

படத்தின் டைட்டிலை போல படத்தின் கதையிலும் திரைக்கதையிலும் இடியாப்ப சிக்கல் இருப்பது படத்தை ரசிகர்களுடன் ஒன்றிணைக்க முடியாமல் தவிக்கிறது.

#image_title

தி கேரளா ஸ்டோரி படத்தில் இந்து பெண்ணாக நடித்து இஸ்லாமிய பெண்ணாக கன்வெர்ட் ஆகும் கதாபாத்திரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய அதே சித்தி இத்னானி தான் இந்த படத்தில் இந்து – முஸ்லீம் ஒன்றாக கூடி வாழும் கதையில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ள சித்தி இத்னானியை வைத்துத் தான் இந்த படத்தின் கதையையே இயக்குநர் கட்டமைத்துள்ளார். கில்லி படத்தில் தனலட்சுமி த்ரிஷாவை முத்துப்பாண்டி பிரகாஷ் ராஜ் திருமணம் செய்துக் கொள்ள நினைப்பது போல, இந்த படத்தில் இரு முறைமாமன்கள் சித்தி இத்னானியை திருமணம் செய்ய நினைக்க, அவர்களுக்கு நோ மீன்ஸ் நோ என சொல்லும் நாயகி சித்தி இத்னானியை ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.

#image_title

ஜெயிலில் இருக்கும் காதர் பாட்சாவை சந்திக்க முயற்சி செய்து நாயகி சித்தி இத்னானி தோற்றுப் போக, தன்னை தேடி வந்த பெண் யார் என சிறையில் இருந்து வெளியே வந்து ஹீரோ தேட, அந்த பெண்ணுக்கும் ஆர்யாவுக்கும் காதல் ஏற்படுகிறது.

உடனடியாக இரு முறைமாமன்கள் சும்மா விடுவார்களா? ஆர்யாவை போட்டுத் தள்ள முயற்சிக்க, ஆறடி உயர சார்பட்டா பரம்பரை ஆர்யா சும்மா விடுவாரா? 9 ஃபைட் போட்டு எதிரிகளை கிளைமேக்ஸ் வரை துவம்சம் செய்துக் கொண்டே இருக்கிறார்.

எப்போடா படத்தை முடிப்பீங்க என ரசிகர்கள் அடிக்கடி இன்டர்வெல் எடுத்துக் கொண்டே இருக்க, ஒரு வழியாக மத ஒற்றுமை, சாதி அரசியல் என வசனங்களை வைத்து படத்தை முடித்திருக்கிறார் முத்தையா.. ரசிகர்களையும் சேர்த்துத்தான்!

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: கழுத்தறுப்பு

ரேட்டிங்: 1.5/5.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Book your dream yacht charter in turkey with yachttogo.