ஆரோக்கியம்
இளம் வயதில் மாரடைப்பு அபாயம் அதிகரிக்க காரணமான 3 ஆபத்தான பழக்கங்கள்!

இளம் வயதிலேயே இதய நோய், மாரடைப்பு! காரணமாக இருக்கும் 3 தீய பழக்கங்கள்
பொதுவாக இதய நோய், மாரடைப்பு என்றால் வயதானவர்களை மட்டுமே தாக்கும் என்று நினைத்த காலம் கடந்துவிட்டது. இன்று இளம் வயதிலேயே – குறிப்பாக 20-30 வயதிலுள்ள இளைஞர்களே அதிகமாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அதிர்ச்சிகரமான நிலைக்கு காரணமான மூன்று முக்கியமான தீய பழக்கங்களை இப்போது பார்ப்போம்.
1. தாமதமாக தூங்கும் பழக்கம்
இன்றைய இளைஞர்கள் அதிக நேரம் மொபைல், லேப்டாப்பில் நேரத்தை கழிப்பதால், நள்ளிரவு வரை விழித்து அதிகாலையில் தூங்கும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இது உடலClock rhythm-ஐ பாதிப்பதோடு, இருதயத்தின் செயல்பாடுகளையும் பாதிக்கிறது. மருத்துவர் ஆலோசனைப்படி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் 7–8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
2. காலை உணவை தவிர்ப்பது
துரித வாழ்க்கைமுறையால் நேரமின்மையின் பெயரில் பலர் காலை உணவை தவிர்த்து விடுகிறார்கள். ஒருசிலர் பசிக்கவே ஒரு டீ பிஸ்கட் என்று விட்டு விடுகின்றனர். இது வளர்ச்சி தை மாற்றத்தை பாதிப்பதோடு, இருதயத்தில் கொழுப்பு சேர்வதையும் தூண்டுகிறது. காலையிலேயே ஏதாவது ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு அவசியம்.
3. காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிக்கும் பழக்கம்
சிகரெட் பழக்கம் இன்றைய இளைஞர்களில் மிகவும் பரவலாக இருக்கிறது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் சிகரெட் பிடிப்பது, இருதயத்திற்கே நேரடியாக தாக்கம் கொடுக்கிறது. இதனால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகரிக்கிறது.
மாரடைப்பு தவிர்க்க வேண்டிய முக்கிய வழிகள்
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள்
குறைந்தது 7 மணி நேரம் நிம்மதியான தூக்கம்
நீர்ச்சத்து குறைவாகாமல் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்
சிகரெட், மதுபானத்தை முழுமையாக விலக்க வேண்டும்
காலை உணவை தவிராமல் உண்பது மிக முக்கியம்
சீரான வாழ்க்கைமுறையை கடைபிடிக்க வேண்டும்


