உலகம்
புழு, பூச்சிகளை ஒரு மாதம் சாப்பிட்டு உயிர் வாழ்ந்த இளைஞர்: அமேசான் காடு திகில் சம்பவம்!

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசான் காட்டில் வழிதவறி சென்ற இளைஞர் ஒருவர் ஒரு மாத காலமாக புழுக்கள், பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
கடந்த ஜனவரி 25-ஆம் தேதி 30 வயதான ஜொனாடன் அகோஸ்டா என்ற பொல்லிவியன் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்கள் 4 பேருடன் அமேசான் காட்டிற்கு வேட்டையாட சென்றுள்ளார். அப்போது வழி தவறி காணாமல் போய், நண்பர்களின் தொடர்பையும் இழந்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த நண்பர்கள் அவரை முடிந்தவரை தேடினர், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாததால் ஜொனாடன் அகோஸ்டாவின் குடும்பத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார்கள் நண்பர்கள். இதனையடுத்து மீட்புக்குழுவினர் அமேசான் காட்டில் இறங்கி தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மிகவும் மெலிந்த நிலையில் ஜொனாடன் அகோஸ்டா மீட்கப்பட்டார்.
இதனையடுத்து தனது ஒரு மாத கால அமேசான் காட்டு வாழ்க்கை மற்றும் உயிர்பிழைத்த சம்பவத்தை விவரித்துள்ளார் ஜொனாடன் அகோஸ்டா. அதில், ஒரு மாதமாக உணவு, தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு, அங்குள்ள பூச்சி, புழுக்களை திண்று தனது பசியை தீர்த்துள்ளார். மழை பெய்யும்போது, தான் போட்டிருக்கும் பூட்ஸ் ஷூ மூலம் தண்ணீர் பிடித்து குடித்துள்ளார். தண்ணீர் கிடைக்காத சில நாட்களில் தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்து வந்துள்ளார்.
இந்த ஒருமாத காலத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் காட்டிற்குள் நடந்துள்ளார். தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்ட அவருக்கு மழை பெரும் வரமாக அமைந்துள்ளது. மழை பெய்யாமல் இருந்திருந்தால் தான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார் ஜொனாடன் அகோஸ்டா.