உலகம்
ஐஸ்கட்டி மழை, மீன் மழை கேள்விப்பட்டிருக்கின்றோம், மண்புழு மழை கேள்விப்பட்டதுண்டா? பொதுமக்கள் அதிர்ச்சி..!

பொதுவாக ஒரு சில இடங்களில் ஐஸ்கட்டி மழை பெய்யும் என்றும் மிக அரிதாக மீன் மழை பெய்யும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சீனாவில் உள்ள ஒரு பகுதியில் மண்புழு மழை பெய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வந்தாலும் அந்த பகுதி மக்கள் அதனை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு குடைகளை பிடித்தபடி கடந்து செல்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானத்திலிருந்து சாரை சாரையாக மண்புழு கார்கள் மற்றும் நிலத்தில் விழும் அந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் மீன் மழை பெய்யும் என்பதும் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சும் போது அவற்றில் மீனும் சேர்ந்து உறிஞ்சப்படும் என்றும் மீண்டும் மழையாக மேகத்திலிருந்து பொழியும்போது அந்த மீன்கள் கீழே விழுவதால் மீன் மழை பொழியும் என்பது தெரிந்ததே.
ஆனால் புழுக்கள் வானத்திலிருந்து விழுவதை நம்ப முடியாத வகையில் அனைவரும் பார்த்து வருகின்றார். இது குறித்து சீன அரசு இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றாலும் நிபுணர்கள் ஒரு சில காரணங்களை கூறுகின்றனர். சூறாவளி நீர்வீழ்ச்சிகள் புழுக்கள் போன்ற சிறிய உயிரினங்களை ஒரு இடத்தில் இருந்து வேறு எங்காவது தனது சூறாவளி காற்றின் மூலம் எடுத்துச் சென்று விழ வைக்கும் என்று கூறுகின்றனர்.
இன்னும் ஒரு சிலர் வேறு சில காரணத்தை கூறி வந்தாலும் உண்மையில் இந்த பகுதியில் புழுமழை பெய்வதற்கு என்ன காரணம் என்று குறித்து இன்னும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் கண்டறியப்படவில்லை. பெரும்காற்றினால் ஒரு இடத்தில் இருந்து புழுக்கள் எடுத்துச் செல்லப்பட்டு இன்னொரு பகுதியில் மழை போல் பெய்யப்பட்டு இருக்கலாம் என்பது மட்டுமே இப்போதைக்கு கூறும் காரணங்களாக உள்ளது.
சீனாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி புழுமழை பெய்யும் என்பதால் அந்த பகுதி மக்களுக்கு இது சர்வசாதாரணமாக இருந்தாலும் இந்த வீடியோ உலகம் முழுவதிலும் உள்ள மற்ற மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.