உலகம்
2000 ஊழியர்களின் வேலை காலி.. பிரபல வங்கி எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சி..!

வேலை நீக்க நடவடிக்கை என்பது தினந்தோறும் வெளியாகும் செய்தி ஆகிவிட்டது என்பது வெறும் வருத்தத்தை கூறியதாக பார்க்கப்படுகிறது. கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றும் தினந்தோறும் வேலை நீக்க நடவடிக்கை என்பது தவறாமல் வெளிவரும் செய்தியாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ஏற்கனவே வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வேலை நீக்க நடவடிக்கை காரணமாக மேலும் வேலை இல்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தற்போது சிட்டி வங்கியும் தனது ஊழியர்களில் 2000 பேர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2022 ஆம் ஆண்டின் கணக்கின்படி சிட்டி குழுமத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் இருந்த நிலையில் அவர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பணி நீக்கம் அதாவது 2000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஒரு வழக்கமான வேலை நீக்க நடவடிக்கைதான் என்றும் வணிக திட்டமிடலின் ஒரு பகுதி என்றும் பணியாளர்களை குறைக்க மேலாளர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு துறைகளில் இந்த வேலை நீக்க நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஜேபி மோர்கன் வங்கி நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் அதேபோல் கோல்ட்மேன் சாச்ஸ் என்ற வங்கியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிட்டி வங்கியின் வேலை மிக்க நடவடிக்கை எடுத்துள்ளது அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்.
சிட்டி குழுமம் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய போது ’மாற்றம் மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகளில் எங்கள் நிறுவனம் முதிர்ச்சியான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் காரணமாக ஊழியர்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் சுறுசுறுப்பாக ஊழியர்களை நாங்கள் பணியமற்ற தீவிரமாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் தொடர்ந்து திறமையாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்து வருகிறோம் என்றும் சரியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சரியான வேலை கொடுப்பதை உறுதி செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். எங்களது வங்கியை வளப்படுத்தவும் எங்கள் வங்கியை நவீனப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம் என்றும் அதற்கான செயல்முறைகளை நெறிப்படுத்தி வருகிறோம் என்றும் ஆனால் அதே நேரத்தில் செலவீனங்களை கட்டுப்படுத்த வேலை நீக்க நடவடிக்கையை தவிர்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.