சினிமா செய்திகள்
பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் வெளியேறப்போவது இந்த மூவரில் ஒருவரா?

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் டிவியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இருவரின் எலிமினேஷனுக்கு பின் தற்போது 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர் .
ஏற்கனவே சக்கரவர்த்தி மற்றும் சுஜா ஆகிய இருவரும் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வார நாமினேஷனில் அபிராமி, தாடி பாலாஜி, சுருதி ஆகியோர் இடம்பெறாத நிலையில் பாலாஜி முருகதாஸ், நிரூப், அபிநய், அனிதா சம்பத், ஜூலி, ஷாரிக், சினேகன், தாமரை ஆகிய எட்டு போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் பாலாஜி முருகதாஸ், தாமரை, நிரூப், ஜூலி, அனிதா சம்பத் ஆகிய ஐந்து பேர்கள் அதிக வாக்குகளைப் பெற்று கிட்டத்தட்ட காப்பாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஷாரிக், அபினய் மற்றும் சினேகன் ஆகிய மூவர் மட்டுமே டேஞ்சர் ஜோனில் இருப்பதாகவும் இவர்கள் மூவரில் ஒருவராக வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
குறிப்பாக விஜய் டிவியின் அன்புக்குரியவரான அபினய் வெளியேற மாட்டார் என்றும் எனவே சினேகன் வெளியேற தான் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.


















