சினிமா
பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட்.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணாதாஸ் ஆகிய இருவருமே தங்களது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறியிருந்தனர். பூஜா ஹெக்டே ஒரு வீடியோ வெளியிட்டு இப்படம் ஒரு சிறப்பான அனுபவம் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், விஜய் நடிக்கும் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு நெல்சன் கட்டியணைத்து அன்பை காட்டி விடை கொடுத்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் நடிக்கும் காட்சிகளே முடிக்கப்பட்டு விட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















