சினிமா செய்திகள்
விஜய்சேதுபதியின் ‘அனபெல் சேதுபதி’: இரண்டு நிமிட கலக்கல் வீடியோ!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவான ‘அனபெல் சேதுபதி என்ற திரைப்படத்தின் 2 நிமிட வீடியோவை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அனபெல் சேதுபதி. இந்த படத்தில் டாப்சி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரண்டு நிமிடத்திற்கும் மேலான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் டாப்ஸி ஒரு அரண்மனையில் சென்று ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கும் போது அவரை ஜகபதி பாபு அரூபமாக பின்தொடர்கிறார். அவர் பின்தொடர்வது டாப்ஸிக்கு தெரியவில்லை. மேலும் திடீரென டாப்ஸிக்கு பழைய நினைவுகள் அதாவது போன ஜென்மத்தில் நினைவுகள் எல்லாம் வருகின்றன. இத்துடன் இந்த வீடியோவை நிறைவு பெறுகிறது.
இந்த இரண்டு நிமிட காட்சிகள் இருந்து இந்த படம் பூர்வ ஜென்மத்தில் டாப்ஸியின் கேரக்டர் நினைவுக்கு வருவது போன்று கதை அமைக்கப்பட்டு இருக்கும் என்றும் பூர்வ ஜென்மத்தில் உள்ள பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் விஜய்சேதுபதி நடித்து இருப்பார் என்றும் தெரியவருகிறது.
விஜய்சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, ராஜேந்திர பிரசாத், ராதிகா, யோகிபாபு, வெண்ணிலா கிஷோர், சுப்பு பஞ்சு, சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியான், ஜாங்கிரி மதுமிதா, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.