சினிமா செய்திகள்
விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் மேல்முறையீட்டு வழக்கு: இன்று தீர்ப்பு!

நடிகர் விஜய்யின் ரோல்ஸ்ராய் கார் வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார். அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் அவரது சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி சுப்பிரமணியம் அவர்கள் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததோடு வரியை ரத்து செய்ய கோரிய விஜய்க்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த நிலையில் நீதிபதி விதித்த அபராதத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஜய் மேல்முறையீடு செய்திருந்தார்/ இந்த மேல்முறையீட்டு மனு கடந்த ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு இடைகால தடை விதித்தது.
ஆனால் அதே நேரத்தில் விஜய் செலுத்தவேண்டிய ரோல்ஸ் ராய் காருக்கான வரியை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் விஜய் தான் வாங்கிய சொகுசு காருக்கான வரியை முழுமையாக கட்டி விட்டார்.
இந்த நிலையில் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















