சினிமா செய்திகள்
‘தளபதி 67’ படத்தில் விஜய்யின் சம்பளம் ரூ.300 கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்!
Published
2 months agoon
By
Shiva
நடிகர் விஜய் இதுவரை ஒரு படத்தில் நடிப்பதற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வாரிசு படத்திற்கு அவர் 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படமான தளபதி 67 படத்திற்கு அவர் 300 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 500 கோடி என்றும் இந்த படத்தின் வருமானம் சுமார் 700 முதல் 900 கோடி வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமை ரூ.400 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தில் விஜய் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக் கொள்ளாமல் இந்த படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியாக பெற்றுக் கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு மட்டும் வருமானத்தில் 40 சதவீதம் சம்பளமாக கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவரது பங்கிற்கு சுமார் 300 கோடி ரூபாய் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தென்னிந்திய திரையுலகில் இதுவரை 300 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற நடிகர்கள் இல்லை என்ற நிலையில் விஜய் கோலிவுட் திரையுலகின் உச்சத்துக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே பாலிவுட் திரையுலகில் சல்மான்கான் அமீர்கான் ஷாருக்கான் உள்பட பல நடிகர்கள் வருமானத்தின் அடிப்படையில் தான் சம்பளத்தை பெறும் முறையில் ஒப்பந்தமாகி வருகின்றனர் என்ற நிலையில் விஜய் கோலிவுட் திரையுலகில் முதல் முறையாக வருமானத்தின் அடிப்படையில் படம் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
You may like
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
வேலைநீக்க நடவடிக்கை இருக்கட்டும்… இந்திய ஊழியர்களுக்கு இந்த ஆண்டு ஜாக்பாட்!
‘தளபதி 67’ படத்தில் 6 வில்லன்கள்.. யார் யார் தெரியுமா?
சக்கர பொங்கல்.. வெண் பொங்கலுக்கு நடுவே கரும்பா நிக்கிறாரே.. விஜய் அட்மின் விட்டா ஹீரோவாகிடுவாரு போல!
இது 100 பர்சன்ட் தெலுங்கு படம்ப்பா! டோலிவுட்டில் சக்கைப் போடு போடும் வாரிசு; தில் ராஜு சம்பவம்!