சினிமா
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
Published
1 week agoon
By
Saranya
விஜய்யின் வாரிசு திரைப்படம் 250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மீண்டும் ஆணி அடித்தது போல தில் ராஜு தில்லாக அதிகாரப்பூர்வ ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களை அழ வைத்துள்ளார்.
விஜய்யின் வாரிசு திரைப்படம் 2வது வாரமும் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய நிலையில், 11 நாட்களிலேயே வாரிசு திரைப்படம் 250 கோடி வசூல் செய்ததாக ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
7 நாட்களில் 210 கோடி என சொன்னதே புருடா என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டவர்கள் ட்வீட் போட்டிருந்த நிலையில், அத்தனைக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக சக்சஸ் பார்ட்டியை வைத்து கொண்டாடியது மட்டுமின்றி அடுத்த அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை வாரிசு திரைப்படம் 252 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதை உறுதி செய்துள்ளனர். அதிக பட்சமாக வாரிசு திரைப்படம் 275 முதல் 300 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அந்த பக்கமோ இதுவரை முதல் நாள் வசூல் தொடங்கி 11 நாட்கள் ஆகியும் படத்தின் வசூல் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் #MrNumberOneVIJAY ஹாஷ்டேக் போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
தயாரிப்பாளர்களே பொய்யான பாக்ஸ் ஆபிஸ் சொல்ல தள்ளப்படுகின்றனர் என இயக்குநர் எச். வினோத் சமீபத்தில் பேசியதை கேட்ட விஜய் ரசிகர்கள் அப்படித்தான் வலிமை படத்துக்கு 200 கோடின்னு வடை சுட்டீங்களா என விளாசி வருகின்றனர். மேலும், இனிமேல் அஜித்தை வைத்து போனி கபூர் அடுத்த படம் பண்ணப் போவதில்லை என்பதால் இப்போ அவர் அமைதியோ அமைதி என சைலன்ட் ஆகிவிட்டாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You may like
-
த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த்.. தளபதி 67 படத்தில் ஆன்போர்ட் ஆன நடிகர்கள் லிஸ்ட்!
-
விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் யார் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
விக்னேஷ் சிவனை விரட்டி விட்ட அஜித்; இனிமே நம்பர் ஒன் ஆவது தான் லட்சியமா?
-
ஜிமிக்கி பொண்ணு பாடல் ரிலீஸ்; ராஷ்மிகாவின் அழகை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
-
துணிவு ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ஓடிடியில் தெரியுமா?
-
பிப்ரவரி 1,2,3… பெரிய சம்பவத்துக்கு ரெடியாகுங்க; இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த தளபதி 67 ஹின்ட்!