சினிமா
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வந்தது கங்கனாவின் ட்விட்டர் … முதல் ட்விட்டே என்ன தெரியுமா?
Published
1 week agoon
By
Shiva
பிரபல பாலிவுட் நடிகை கங்காரனாவது ட்விட்டர் பக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது மீண்டும் செயலுக்கு வந்துள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டர் பக்கம் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் மேற்குவங்க மாநில சட்டசபை தேர்தல் முடிவு குறித்து சில அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக நிரந்தரமாக இடைநீக்கம் செய்யப்பட்டது. அந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அதில் அவர் சர்ச்சைக்குரிய பதிவு செய்திருந்தார்.
இதனை அடுத்து அவரது ட்வீட் கோபத்தையும் வன்முறையும் தூண்டுகிறது என குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது. கங்கனாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது ட்விட்டர் பக்கத்தை மீட்க பல வழிகளில் முயன்ற போதிலும் அதில் அவருக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பல கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. குறிப்பாக அமெரிக்க முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் பக்கம் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் பக்கமும் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் தனது முதல் ட்விட்டில் ’அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்து தான் நடித்து இயக்கி வரும் ’எமர்ஜென்சி’ படத்தின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் படப்பிடிப்பில் விறுவிறுப்பாகமுடிந்தது என்றும் இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி திரையரங்குகளில் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கங்கனாவின் ரசிகர்கள் ட்விட்டருக்கு மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும் வருக என்பது குறித்த பல பதிவுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் கங்கனாவின் ட்விட்டர் பக்கம் மீண்டு வந்தாலும் அவரது பக்கத்தில் நீல நிற டிக் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் அதற்கான கட்டணத்தை செலுத்தி விரைவில் நீல நிற டிக்கை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
And it’s a wrap !!!
Emergency filming completed successfully… see you in cinemas on 20th October 2023 …
20-10-2023 🚩 pic.twitter.com/L1s5m3W99G— Kangana Ranaut (@KanganaTeam) January 24, 2023
You may like
-
நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
இன்று மாலைக்குள் அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும்: ஊழியர்களுக்கு டுவிட்டர் அதிரடி அறிவிப்பு!
-
முதன்முதலில் டேட்டிங் சென்ற பெண்ணிடம் இதையா கேட்பார்கள்? எலான் மஸ்க்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
-
750 பில்லியன் சொத்துக்களை இழந்த முதல் தொழிலதிபர்.. எலான் மஸ்க்கிற்கு இப்படியும் ஒரு சாதனையா?
-
சுந்தர்பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தகவல் திருட்டு: விற்பனை செய்ய ஹேக்கர் திட்டமா?