தமிழ்நாடு
ஒன்றியம் என்பதற்கு இதுதான் அர்த்தம்: வைரமுத்து விளக்கம்!

திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகின்றனர். ஒன்றிய அரசு என்றால் பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என பாஜக மற்றும் அதிமுகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என்ன பேசவேண்டும் என்பதை நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சட்டசபையில் சமீபத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம், அழைத்துக் கொண்டு இருப்போம் என்றும் உறுதிபடக் கூறினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கவியரசு வைரமுத்து ஒன்றியம் என்றால் உண்மையில் என்ன அர்த்தம் என்பது குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஒன்று + இயம் = ஒன்றியம்
ஒன்று என்ற சொல்லுக்கு
ஒற்றுமை என்று பொருள் தருகிறது
தமிழ் லெக்சிகன்.
இயம் என்பது
இயங்குதலாகிய வினை எனலாம்.
ஒற்றுமைப்பட்டு
ஒன்றாய் இயங்குவது ஒன்றியம்.
இதில் என்ன பிழை?
எதிர்க்கருத்துக்கு ஏது இடம்?
மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு
தலைவணங்கி ஏற்கத்தக்கது
ஒன்று + இயம் = ஒன்றியம்
ஒன்று என்ற சொல்லுக்கு
ஒற்றுமை என்று பொருள் தருகிறது
தமிழ் லெக்சிகன்.இயம் என்பது
இயங்குதலாகிய வினை எனலாம்.
ஒற்றுமைப்பட்டு
ஒன்றாய் இயங்குவது ஒன்றியம்.இதில் என்ன பிழை?
எதிர்க்கருத்துக்கு ஏது இடம்?மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பு
தலைவணங்கி ஏற்கத்தக்கது.— வைரமுத்து (@Vairamuthu) July 2, 2021






