Connect with us

சினிமா செய்திகள்

விஜே அர்ச்சனா தலையில் கை வைத்த வைரமுத்து.. ‘உஷார்’ என எச்சரித்த சின்மயி

Published

on

By

தொலைக்காட்சி விஜே மற்றும் நடிகை அர்ச்சனா வைரமுத்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் அவரிடம் உஷாராக இருந்து கொள் என சின்மயி அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு கூறியிருந்தார் என்பதும் இது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் வாக்குவாதம் நடந்து வந்தது என்பதும் தெரிந்ததே. மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு அவ்வப்போது சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகிறார் என்பதும் மீடு பிரச்சனை தமிழகத்தில் தலைதூக்க சின்மயி கொடுக்கும் ஆதரவும் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சின்மயி பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் அவரது நடவடிக்கைகளுக்கு விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’ராஜா ராணி 2’ சீரியலில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் கவியரசு வைரமுத்து சந்தித்ததாக அவருடன் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் விஜே அர்ச்சனாவின் தலையில் கைவைத்து வைரமுத்து ஆசி கூறுவத் போல் உள்ளது.

இந்த பதிவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு சிலரோ வைரமுத்துவிடம் உஷாராக இருக்கவும் என்று கமெண்ட் பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாடகி சின்மயி இந்த பதிவுக்கு, ‘இது போல தான் அனைத்தும் ஆரம்பிக்கும், அவரிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அவரை சந்திக்கும்போது துணைக்கு யாரையாவது வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள்’ என கமெண்ட் செய்துள்ளார்.

இந்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜே அர்ச்சனா அந்த கமெண்ட்டை டெலிட் செய்துள்ளார். ஆனால் அதற்கு முன்னரே பலர் இந்த கமெண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சினிமா2 hours ago

இந்த மாசம் வரை தான் கமலுக்கு டைம்; இல்லைன்னா அந்த ஹீரோவை இயக்க போயிடுவேன்! துணிவு இயக்குநர் அதிரடி?

சினிமா2 hours ago

லோகேஷுக்கு எனக்கும் தான் போட்டியே! பாலிவுட் பிரபலத்தை இறக்கிய நெல்சன்; ஜெயிலர் அப்டேட்!

சினிமா3 hours ago

சைடு போஸில் தெறிக்கும் முன்னழகு; ஏய் சுழலியின் எக்கச்சக்க கிளாமரில் திண்டாடும் இளசுகள்!

சினிமா3 hours ago

போர்ச்சுகலில் குடும்பத்துடன் டூர் அடித்து வரும் அஜித்; ஷாலினி பகிர்ந்த புகைப்படம்!

சினிமா4 hours ago

விரட்டப்படட் விக்னேஷ் சிவன்; லண்டனுக்கு புறப்பட்ட மகிழ் திருமேனி! ஏகே62 வாய்ப்பு கிடைக்குமா?

வணிகம்5 hours ago

இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!

வேலைவாய்ப்பு6 hours ago

ரூ.2,18,200/- ஊதியத்தில் IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 hours ago

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Air India வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 hours ago

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு CRPF-ல் வேலைவாய்ப்பு!

உலகம்7 hours ago

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலமானார்!

வணிகம்5 days ago

தங்கம் விலை அதிரடியாக ஒரேநாளில் இவ்வளவு சரிவா(31/01/2023)!

சென்னையில் மெட்ரோ லைட் மெட்ரோ ரயில் தெரியும் அது என்ன மெட்ரோ லைட் Soon Chennai May Get Tram Like MetroLite Train Service
தமிழ்நாடு6 days ago

சென்னையில் மெட்ரோ லைட்.. மெட்ரோ ரயில் தெரியும்.. அது என்ன மெட்ரோ லைட்?

இந்தியா6 days ago

அதானி குழுமத்தின் பங்குகள் ரூ.1 என இறங்கினால் கூட எல்.ஐ.சிக்கு நஷ்டமில்லை.. எப்படி தெரியுமா?

உலகம்6 days ago

3 மாதங்களுக்கு முன் 4000, இப்போது 6000.. வேலைநீக்க அறிவிப்பை வெளியிட்ட இன்னொரு நிறுவனம்!

சென்னை அவுட்டர் ரிங் ரோடு
தமிழ்நாடு7 days ago

சென்னை அவுட்டர் ரிங் ரோடு சாலையில் பயணிக்க டோல் கட்டணமா?

வணிகம்7 days ago

இன்று ஆபரணத் தங்கம் விலை (30/01/2023)!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் – 3167

பர்சனல் பைனான்ஸ்4 days ago

பெண்களுக்கு 7.5% வட்டி விகிதத்தில் சிறு சேமிப்பு திட்டம்.. இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே முந்துங்கள்!

ஆரோக்கியம்6 days ago

கட்டிகள், வாய்ப்புண் குணமாகத் திருநீற்றுப் பச்சிலை!

வேலைவாய்ப்பு5 days ago

டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!