செய்திகள்
11 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த சிறுவன்… செங்கல்பட்டில் அதிர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பக்கம் பகுதியில் வசிக்கும் சிறுமி சுஜிதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் தந்தை கோழி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார்.
மின்சார கட்டணம் செலுத்துவதற்காக சிறுமியை தாயுடன் அழைத்து சென்ற தாய், வீட்டிக்கு செல்லுமாறு சிறுமியிடம் கூறிவிட்டு கோழிக்கடைக்கு சென்றுவிட்டார். சிறுமி தனியாக வீட்டிற்கு திரும்பினார். அதன்பின் தாய், தந்தை இருவரும் வீட்டிற்கு சென்று பார்த்த போது சிறுமி வீட்டில் இல்லை. அருகில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடிய போது, சிறுமியின் வீட்டின் அருகில் இருந்த ஒரு புதரில் சிறுமியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேதபரிசோதனையில் தெரியவந்தது.
போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியதில், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே, சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.














