இந்தியா
கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் தொடருமா? யூஜிசி அதிரடி அறிவிப்பு!

கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகள் தொடருமா? அல்லது நேரடி தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை யூஜிசி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது என்பதும் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் உள்பட பல கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்தனர் என்பதும் இருப்பினும் இனி ஆன்லைன் தேர்வு கிடையாது என்று அரசு உறுதிபடக் கூறி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது யுஜிசி இதுகுறித்து அதிரடியாக விளக்கம் அளித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனிதே நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்த வேண்டும் என யுஜிசி அதிரடியாக தெரிவித்துள்ளது.
மாநில உயர் கல்வித்துறை செயலாளர்களுக்கும் யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் அவர்கள் இதுகுறித்து விரிவாக கடிதம் எழுதியுள்ளார் என்பதும் இதனை அடுத்து இனி ஆன்லைன் தேர்வுக்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


















