இந்தியா
துணை பேராசிரியர் வேலைக்கு இனி பி.எச்.டி தேவையில்லை: யுஜிசி

உஸ்மானியா பல்கலைக்கழக கட்டிட திறப்பு விழாவின் போது இனி துணை பேராசிரியர் வேலைக்கு பி.எச்.டி தேவையில்லை என யுஜிசி தலைவரும், பேராசிரியருமான எம் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
இனி யூஜிசி நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் துணை பேராசிரியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
யூஜிசி டிவிட்டர் பதிவு
இது குறித்து டிவிட்டர் பதிவு மூலமாக உறுதி செய்துள்ள யுஜிசி, துணை பேராசிரியர் வேலைக்கு இனி பி.எச்.டி தேவையில்லை என யுஜிசி தலைவரும், பேராசிரியருமான எம் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும்?
துணை பேராசிரியர் வேலைக்கு இனி பி.எச்.டி தேவையில்லை என யுஜிசி தலைவரும், பேராசிரியருமான எம் ஜெகதேஷ் குமார் கூறியிருந்தாலும், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அது விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
யுஜிசி நெட் தேர்வு என்றால் என்ன?
இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘உதவி பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ ஆகியவற்றுக்கான தகுதியைத் தீர்மானிக்கும் சோதனை தேர்வே யுஜிசி நெட் தேர்வு.
யுஜிசி நெட் தேர்வு எப்போது நடக்கும்?
யுஜிசி நெட் தேர்வு ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.
யார் எல்லாம் யுஜிசி நெட் தேர்வு எழுதலாம்?
வெற்றிகரமாக முதுகலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் யுஜிசி நெட் தேர்வு எழுதலாம்.
எந்த பாடப் பிரிவுகள்?
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் யுஜிசி அனுமதித்துள்ள 83 பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.