சினிமா செய்திகள்
’டாக்டர்’ வெற்றியால் ஆயுதபூஜை ரிலீஸை கேன்சல் செய்த இரண்டு படங்கள்!

வரும் ஆயுத பூஜை தினத்தில் 3 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இரண்டு படங்கள் பின்வாங்கி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தியால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக இந்த படம் ஓடி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே ஆயுத பூஜை தினத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகினாலும் ’டாக்டர்’ திரைப்படம் பல திரையரங்குகளில் தொடர்ந்து ஓடும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. எனவே ஆயுத பூஜை தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்த ‘தள்ளிப்போகாதே’ மற்றும் ’ராஜவம்சம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகள் கிடைக்கவில்லை. சுந்தர் சி யின் ’அரண்மனை 3’ திரைப்படத்திற்கு மட்டுமே ஒரு சில திரையரங்குகள் கிடைத்து உள்ளது என்பதால் தள்ளிப்போகாதே மற்றும் ராஜவம்சம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஹாலிவுட் படம் ஒன்றும் அதே தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு நிலையில் அந்த படத்துக்கும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
’டாக்டர்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியாகிய போது அனைவரும் ஆச்சரியமாக சனிக்கிழமை ரிலீஸ் செய்வதை பார்த்தனர். ஆனால் மிகவும் திட்டமிட்டு இந்த படம் ஒரு வேளை வெற்றிபெற்றால் ஆயுதபூஜை விடுமுறை தினத்திலும் கூட்டம் குவியும் என்பதை கணித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
























