Connect with us

தமிழ்நாடு

டிடிவி தினகரன் விரைவில் திமுகவில் இணைவார்: பகடி செய்யும் அமைச்சர் ஜெயகுமார்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைய உள்ளார். இதனையடுத்து அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் விரைவில் திமுகவில் இணைவார் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது அவர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, அவர் அமமுகவில் டிடிவி தினகரனில் இருந்து அவர்களை சார்ந்தவர்கள் அனைவரும் திமுகவில் போய் ஐக்கியமாவார்கள்.

அதற்கு ஒரு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் இணைய உள்ளார். சொன்னதுபோலவே விரைவில் தினகரன் திமுகவில் இணைய வாய்ப்பு உண்டு. ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாகத்தான் முதலில் அவரை அனுப்பியுள்ளார் என ஜெயக்குமார் பகடி செய்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Bio pages sell.