Connect with us

சினிமா செய்திகள்

உண்மை வெல்லட்டும்.. “அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” கபிலன் வைரமுத்து!

Published

on

வைரமுத்து மீது சிமயி உள்ளிட்ட பலர் பாலியில் தொல்லை அளித்ததாக மீடூ மூலம் புகார் அளித்து வரும் நிலையில் “அப்பா பெருமையை அழுக்குப்படுத்துவோர் அனுதாபத்திற்குரியோர்” எனக் கபிலன் வைரமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் விவரம் வருமாறு..

ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமெனக் கருதுகிறேன்.

வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதுதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படிப் போனாலும் நான் நன்றாக இருக்கவேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை. தன்வாழ்வே அவர்களின் வாழ்வியல். குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலகப் பொருளாதாரச் சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்குப் பாதுகாத்தது குடும்பக் கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கங்கள் ஆண் – பெண் சரிசமமாக இயங்கும் குடும்ப அமைப்பை ஒரு முக்கியக் கனவாகக் கருதின. தற்போது மேல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள் அந்தக் குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என அய்யம் எழுகிறது. எந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது. Metoo என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது அது எங்கே திசை மாறுகிறது எனத் தீர்க்கமாகச் சொல்லும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அவர்களின் கருத்தியலும் இதுபோன்ற அமைப்புகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புகிறேன்.

அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும்வரை செருப்பு அணியும் சூழல் இன்றிக் கரட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர். இந்திய வரைப்படத்தில் இடம் பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து இந்தியாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக அவர் உயர்ந்திருப்பது இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்குத் தெரியாது.

படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்த தக்காளிகளைப் பறித்துத் தின்றுவிட்டுப் பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்குக் கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது. அப்பாவும் அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்குப் பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின்விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர் – தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது. அங்குலம் அங்குலமாக அவர் தன் வாழ்க்கையைச் செதுக்கியிருக்கிறார். கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கிப்படுகிற நவீன சூழலில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து எழுந்த அவருடைய வாழ்வு இன்று எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை முன்னுதாரணம்.அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது. பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.

தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாகப் பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சனையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் கபிலன் வைரமுத்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா3 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
Jak dlouho trvá první doba porodní ?. Le piattaforme nft stanno lottando in un mercato in contrazione. producent suplementów dla zwierząt | ioc.