சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் 19 வருடங்கள்: கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக ஹீரோயினாக நடிப்பதே பெரிய விஷயம் என்பதும் அதன் பின்னர் படிப்படியாக அக்கா, அண்ணி, அம்மா, பாட்டி வேடங்களுக்கு நடிகைகள் சென்று விடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அல்லது சினிமாவில் இருந்து விலகி தொலைக்காட்சி தொடர் ஆகியவற்றில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் ஒரு நடிகை 19 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. அந்த சாதனையை நிகழ்த்தி இருப்பவர் நடிகை த்ரிஷா. நடிகை த்ரிஷா கடந்த 1999ஆம் ஆண்டு ஜோடி என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தாலும் 2002ஆம் ஆண்டு மௌனம் பேசியதே என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இதனை அடுத்து கடந்த 19 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, உள்பட பல நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 ஆண்டுகாலம் தமிழ் திரையுலகில் நடித்து வந்தாலும், தற்போது அவர் இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவி கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி சதுரங்க வேட்டை 2, கர்ஜனை போன்ற படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் 19 வருடங்கள் ஹீரோயினாக நடித்து உள்ளதை அடுத்து இன்று அவர் தனது நண்பர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் உடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது.


















