சினிமா செய்திகள்
சந்தானம் நடித்த ‘சபாபதி’: அட்டகாசமான டிரைலர்

காமெடி நடிகராக இருந்து தமிழ் திரையுலகின் ஹீரோவாக மாறிய சந்தானம் நடித்த சபாபதி என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லர் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவியான சபாபதிக்கு யாரும் வேலை தர மாட்டேன் என்கிறார்கள் என்பது மட்டுமின்றி கல்யாணம் செய்வதற்கு பெண் கூட கிடைக்கவில்லை என்றும் அவரது பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் திடீரென சபாபதி வாழ்க்கையில் விதி விளையாடுகிறது. கோடிக்கணக்கான பணம் உள்ள பெட்டி ஒன்று சபாபதி கையில் கிடைக்கிறது. அது கிடைத்தவுடன் சபாபதியின் வாழ்க்கையே திசை மாறுகிறது.
இந்த நிலையில் பெட்டியில் உள்ள பணத்தை தொலைத்த கும்பல் அந்தப் பெட்டியைத் தேடி வரும் நிலையில் சபாபதி அவர்களிடம் மாட்டினாரா? அதன் பின் என்ன ஆனது என்பதுதான் இந்த படத்தின் கதை என இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது.
சந்தானம் ஜோடியாக ப்ரீத்தி வர்மா நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சாயாஜி ஷிண்டே, எம்எஸ் பாஸ்கர், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சீனிவாசராவ் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சந்தானம் திரையுலக வாழ்வில் ஒரு திருப்பு முனையாக படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.