Connect with us

சினிமா செய்திகள்

சந்தானம் படத்திற்காக தமிழில் டுவிட் செய்த ஹர்பஜன்சிங்!

Published

on

By

நடிகர் சந்தானம் நடித்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்திருப்பதை அடுத்து அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது.

முதன்முதலாக மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ’டிக்கிலோனா’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா மற்றும் ஷிரின் காஞ்ச்வாலா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி யோகி பாபு, ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த படத்தை கார்த்திக் யோகி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 10ஆம் தேதி ஜீதமிழ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படத்தின் புரமோஷனுக்காக தமிழில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: இந்த வெட்டு புலிக்கு ஏத்த வெட்டு கிளி பார்த்தா சந்தானம் ஜீ.எப்பிடி இருக்கீங்க. டிக்கிலோனா படம் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!. படம் ரிலீஸ்க்கு ரெடி.நான் இதுல யாருன்னா நீங்களே பாருங்க’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஹர்பஜன்சிங், சர்தேவ் சிங் என்ற ஹாக்கி வீரர் கேரக்டரில் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிக்கிலோனா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசானது என்பதும் இந்த ட்ரைலரில் இருந்து இந்த படம் ஒரு டைம் ட்ராவல் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு1 day ago

தமிழ்நாடு மாநில கிராமப்பு[ற வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Uncategorized2 days ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா7 days ago

ஆதார் கை ரேகையை 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்? ஏன்? கட்டணம் எவ்வளவு? முழு விவரங்கள்!

வணிகம்5 days ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (20/09/2022)!

வேலைவாய்ப்பு4 days ago

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

தெற்கு ரயில்வேவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்7 days ago

சென்னையில் துணை நடிகை தற்கொலை.. என்ன காரணம்?

வணிகம்4 days ago

தங்கம் விலை சரிவு (21/09/2022)!