இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.04.2026

இன்றைய நாளின் சிறப்புகள் – இன்று பௌர்ணமி. பங்குனி உத்திரம். சர்வதேச முட்டாள்கள் தினம். இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட தினம் இன்று.
இன்றைய பொன்மொழி – நேற்று முடியாதது இன்று முடியும்… ஏனெனில், இன்ற நீங்கள் அதிக அனுபவமும் நம்பிக்கையும் கொண்டவர். சவால்கள் வந்தால் பயப்படாதீர்கள். அவை உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்புகள்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம் நாடு முழுவதும் இன்று முதல் கணக்கெடுப்பு பணி ஆரம்பம்! முதற்கட்டமாக செப்டம்பர் 30 வரை வீடுகள் மட்டும் கணக்கெடுக்கப்படும் முக்கிய தரவுகளை பதிவு செய்யும் பெரிய நடவடிக்கை தொடக்கம்
- இன்று ஏப்ரல் 1 முதல் தமிழ்நாட்டின் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது – ரொக்கமாக செலுத்த முடியாது. டிஜிட்டல் பணபரிமாற்றம் மட்டுமே. ஃபாஸ்ட்டேக் இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம்.
- இன்று இரவு 8.00 மணி முதல் அமெரிக்க நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் முதல் டெஸ்லா வரையிலான நிறுவனங்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அங்கிருக்கும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறுமாறும் ஈரானிய புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இன்றுமுதல் முறையான பாதுகாப்புச் சான்றிதழ் (STQC / BIS Certification ) இல்லாத இணையத்துடன் இணைக்கப்பட்ட சிசடிவி கேமராக்களை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது. குறிப்பாக, சீன நிறுவனங்களான Hikvision, Dahua மற்றும் TP-Link போன்ற நிறுவனங்கள் தயாரிக்கம் கேமராக்கள் மற்றும் சீன சிப்செட்களைப் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு இந்தச் சான்றிதழை வழங்க மறுத்து இந்திய மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- வீட்டு உபயோக எல்பிஜி(LPG)-ன் அளவை தற்காலிகமாக குறைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி 14.2 கிலோ சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு 35 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை வரும். 10 கிலோ சிலிண்டர் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும் என கணித்து 14.2 கிலோ சிலிண்டருக்கு பதிலாக 10 கிலோ சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
- கிராம நத்தம் மனையில் வீடு கட்டி வசித்து வருபவர்கள் என்றால் அவர்களிடம் ஆவணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனுபவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு அந்த சொத்தில் முழு உரிமை உண்டு. அவர்களுக்கு கட்டாயம் பட்டா வழங்கப்பட வேண்டும். நில ஆக்கிரமிப்பு சட்டத்தின்கீழ் நோட்டீஸ் அனுப்பி அவர்களை காலி செய்ய சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது. – மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவ.
- பின்லாந்து இப்போ கம்பி இல்லாமலேயே மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பும் Wireless Electricity Transmission சோதனையை வெற்றிகரமாக செய்து காட்டியிரக்காங்க. நாளைய வீடுகள்ள கம்பி ஜங்கிள் கிடையாது… சார்ஜர் தேடிக்கிட்டு இருக்கிற கவலையே வேண்டாம். எங்க இருந்தாலும் மின்சாரம் கிடைக்கும் உலகம் வரப்போகுது.
- இந்திய ரெயில்வே டிக்கெட் முன்பதிவில் காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட்டுகளுக்கு முழுத்தொகையும் திரும்ப வழங்க வேண்டும் என இந்திய நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இன்று ஏப்ரல் 1ம் தேதி – ஒருவருக்கொருவர் ஏப்ரல் ஃபூல் சொல்வதை விட மரம் நட்டு ஏப்ரல் கூல் சொன்னால் என்ன..


