Connect with us

வணிகம்

இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 31ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 248ம் உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4755.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 31 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4786.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38040.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 248 உயர்ந்து ரூபாய் 38288.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5185.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 31ம், ஒரு சவரன் ரூபாய் 248ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.00 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூபாய் 65.90 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65900.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு18 hours ago

சென்னை கடற்கரையில் தண்ணீரில் குளிப்பவர்களைக் கண்காணித்துக் காப்பாற்ற ட்ரோன்கள் அறிமுகம்!

வணிகம்22 hours ago

சென்னையில் 5ஜி சேவையைத் தொடங்கியது ஏர்டெல்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

சினிமா செய்திகள்2 days ago

தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!

இந்தியா5 days ago

இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தூத்துக்குடி மாவட்டக்‌ குழந்தைப்‌ பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

அரசு தலைமை மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 week ago

டிகிரி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!