இந்தியா
இந்த வார பயாஸ்கோப் – டிஸ்க்ளோஷர் டே

நீங்கள் தனியாக இல்லை… நீங்கள் இப்போது ஏலியன்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறீர்கள் என்றால் திகிலாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறதல்லவா?
ஏலியன்கள் தொடர்பான பல்வேறு திரைப்படங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் ஏடுக்கப்பட்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இந்த டிஸ்க்ளோஷர் டே திரைப்படம் உங்களை வேறு ஒரு பரிமாணத்திற்கு இட்டுச் செல்கிறது.
ஏலியன்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகியிருப்பதால் சினிமா ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படத்தின் கதைநாயகி எமிலி பிளாண்ட் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் வானிலை அறிவிப்பாளராக பணியாற்றுகிறார்.அவரின் இன்றைய நாள் வானிலை அறிவிப்பை கேட்க ஒட்டுமொத்த அமெரிக்காவும் காத்திருக்கிறது. ஆனால் சற்று தயக்கத்துடனே நேரலையில் நின்று கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து “நீங்கள் தனியாக இல்லை என்று கண்டுபிடித்தால் அது உங்களை பயமறுத்துகிறதா என்ற வாசகம் இடம்பெற ஏலியன் முக அமைப்பு கொண்ட ஒரு சிறுவன் தொன்றுகிறான். இப்டியான டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் புனைவுகளை கொண்ட கதை. மனிதர்களுடன் ஏலியன்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்து பல காலமாக நிலவி வருகிறது. அது உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும்? என்பதே இக்கதையின் மையக்கரு.
டிரெய்லரில் கதையை யுகிக்க முடியாதபடி செய்திருக்கிறார் ஸ்பீல்பேர்க். ஆனால் இந்த படத்தில் மிரட்டலான திகில் கொடுக்கக்கூடிய காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்று அடித்துச் சொல்கின்றனர் வறாலிவுட்டில். இந்தப்படம் வரும் ஜீன் மாதம் வெளியாகி உங்களை கலங்கடிக்க காத்திருக்கிறது.
