இந்தியா
அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றினார் தமிழ்நாடு முதலமைச்சர் – உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கி அறிவிப்பு

2004ம் ஆண்டு அப்போது ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு சர்வதேச நிதியத்தின் அடக்குமுறைகளுக்கு இணங்கி அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதியம் என்ற திட்டத்தை 01.04.2004 முதல் அமல்படுத்தியது. அதாவது 01.04.2004க்கு பிறகு அரசு பணியில் இணைந்த அணைவருக்கும் பங்களிப்பு ஓய்வுதியம் வழங்கப்படும். இதற்கு அவர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்தது.
ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அம்மையார் அரசு ஊழியர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 01.04.2003 என ஓராண்டு முன்தேதியிட்டு அறிவித்தார்.
அப்போதிருந்து இந்த புதிய ஓய்வுதிய திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வுதிய திட்டமே கொண்டுவர வேண்டும் என அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக போராடி வந்தனர். அவர்களுக்கு இன்று ஒரு விடிவு காலம் பிறந்துள்ளது.
ககன்தீப்சிங் தலைமையிலான அறிக்கையை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மூன்று அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எட்டப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம் என்ற புதிய உறுதியளிப்பட்ட ஓய்வுதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார். இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு்
- அரசின் பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தின் கீழ் பணிபுர்ந்து வரும் அணைத்து அரசு ஊழியர்களும் அவர்கள் பெற்ற கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியமாக வழங்கப்படும் என அறிவிப்பு.
- அரசு ஊழியர்களுக்கு இணையாக இந்த ஓய்வுதியதாரர்களுக்கும் 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
- இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதியம் செயல்படுத்தவதற்கு முன்னர் 01.04.2003 முதல் இன்று வரை பங்களிப்பு ஓய்வுதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வுதியம் வழங்கப்படும்.
- ஓய்வுதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கனவே பர்ந்தரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வுதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வுதியமாக வழங்கப்படும்.
- அரசு அலுவலர்கள் ஒய்வு பெறும்போதும் பணிக்காலத்தில் இறக்க நேரிடும்போதும் அவர்களின் பணிக்காலத்திற்கேற்ப ரூ.25 இலட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
- புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வுதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பின் ஓய்வுதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறும் அணைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வுதியம் வழங்கப்படும்.
- இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவான ரூ.13000 கோடியை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு அத்தொகையை ஓய்வுதிய நிதியத்திற்கு வழங்குமதமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பினை வரவேற்று பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.














