தமிழ்நாடு
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழை பெய்யுமா?

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு இருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ஐந்து நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்றும் மேலும் இந்த காற்றழுத்த தாழ்வால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை அனல்காற்று கடுமையாக வீசும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் 3 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் மழை இல்லை என்றாலும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற சில மாநிலங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

















