இந்தியா
AI தொழில்நுட்பத்தில் எழுதப்படும் கட்டுரைகள்.. ஊழியர்களை நீக்கும் பிரபல ஊடகம்..!

இன்றைய புதிய தொழில்நுட்பமான AI என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மனிதர்கள் சேர்ந்து செய்யும் வேலையை இந்த AI தொழில்நுட்பம் செய்கிறது என்றும் கிட்டத்தட்ட மனிதர்கள் போலவே செய்வதால் மனிதர்களுக்கு வேலை காலி ஆகும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் முன்னணி ஊடகம் என்று இதுவரை கட்டுரை எழுதுவதற்கு ஊழியர்களை நியமனம் செய்திருந்த நிலையில் AI தொழில்நுட்ப மூலம் இனி கட்டுரை எழுதலாம் என்ற செய்தி வெளியானவுடன் 10 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

CNETஎன்ற ஊடக நிறுவனம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி கட்டுரைகளை தயாரிக்கிறது என சில வாரங்களுக்கு முன்ன தகவல் வெளியான நிலையில் அந்நிறுவனம் தனது நிறுவனத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும் கிட்டத்தட்ட 10 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது AI என்ற செயற்கை நுண்ணறிவு கட்டுரைகளை கண்காணிப்பதற்கு என தனியாக ஒரு நபர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் கட்டுரைகளை மேம்படுத்தும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கட்டுரைகள் எழுதி தரும் ஊழியர்களுக்கு இனி வேலை இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பல ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய CNET நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து அறிவிப்பு ஊழியர்களுக்கு மெயில் மூலம் அனுப்பப்படும் என்றும் தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதமே AI கருவிகளை வைத்து பல கட்டுரைகளை CNET வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்டுரைகளில் பல பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்ததை வாடிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து அது நிறுத்தப்பட்டதாகவும் ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுரைகள் எழுதப்பட்டு வருவதாகவும் இது கிட்டத்தட்ட ஊழியர்களால் எழுதப்பட்ட கட்டுரை போலவே இருக்கும் என்பதால் ஊழியர்களின் பணி குறைப்பு என்பது நிச்சயம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி உலகளாவிய பொருளாதார மந்தநிலை, விளம்பரதாரர்களின் வருவாய் குறைவு ஆகியவையும் வேலை நீக்க நடவடிக்கைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.